பிள்ளைக்கலி தீர Pillai Kali Theera Lyrics in Tamil from Kulama Gunama (1971)

Pillai Kali Theera Lyrics in Tamil. பிள்ளைக்கலி தீர - பாடல் வரிகள், Pillai Kali Theera song is from Kulama Gunama 1971. The Movie Star Cast is Sivaji Ganesan, Padmini, Vani Sri and Jai Shankar. Singer of Pillai Kali Theera is P. Susheela and Soolamangalam Rajalakshmi. Lyrics are written by Kannadasan. Music is given by K. V. Mahadevan. Pillai Kali Theera Lyrics in English

  • Song : Pillai Kali Theera
  • Movie/Album Name : Kulama Gunama 1971
  • Star Cast : Sivaji Ganesan, Padmini, Vani Sri and Jai Shankar
  • Singer : P. Susheela and Soolamangalam Rajalakshmi
  • Music Composed by : K. V. Mahadevan
  • Lyrics written by : Kannadasan

Pillai Kali Theera Lyrics in Tamil :

முத்தே மரகதமே

முக்கனியே சர்க்கரையே

கொத்து மருக்கொழுந்தே

கோடை பலாப்பழமே

தத்தும் கிளியே

தடாகத்து தாமரையே

சந்தன சோலையே

சாமந்தி பூக்காடே

வடக்கு பனிமலையே

பனிமலையின் குளிர்க்காற்றே

குளிர் காற்றில் சலசலக்கும்
ஓடை இளந்தண்ணீரே

குலம் காக்க வந்த எங்கள்
கோமகனே தாலேலோ தாலே தாலேலோ.

பிள்ளைக்கலி தீர
என் பிள்ளைக்கலி தீர
உன் அன்னை வந்து சேர்ந்தாள்
உன் அன்னை குறை தீர
நீ பின்னே வந்து சேர்ந்தாய்

பிள்ளைக் கலி தீர
உன் அன்னை வந்து சேர்ந்தாள்
உன் அன்னை குறை தீர
நீ பின்னே வந்து சேர்ந்தாய்
ஆரிராரி ராரோ ஆராராரிராரோ ராரோ

நெஞ்சுக்குத்தான் தெரியும்
அது நினைத்திருந்த நேரம்

கண்ணுக்குத்தான் தெரியும்
அது காத்திருந்த காலம்

நெஞ்சுக்குத்தான் தெரியும்
அது நினைத்திருந்த நேரம்
கண்ணுக்குத்தான் தெரியும்
அது காத்திருந்த காலம்

பெண்ணுக்குத்தான் தெரியும்
உன்னை சுமந்திருந்த கோலம்
பெண்ணுக்குத்தான் தெரியும்
உன்னை சுமந்திருந்த கோலம்

பிள்ளைக்குத்தான் தெரியும்
அன்னை மனதில் உள்ள பாசம்
பிள்ளைக்கலி தீர
என் பிள்ளைக்கலி தீர
உன் அன்னை வந்து சேர்ந்தாள்
உன் அன்னை குறை தீர
நீ பின்னே வந்து சேர்ந்தாய்
ஆரிராரி ராரோ ஆராராரிராரோ ராரோ

வாழ்ந்த நாளும் ஒன்று
நீ வளந்த நாளும் ஒன்று

சுமந்த நாளும் ஒன்று
பால் சுரந்த நாளும் ஒன்று

வாழ்ந்த நாளும் ஒன்று
நீ வளந்த நாளும் ஒன்று

சுமந்த நாளும் ஒன்று
பால் சுரந்த நாளும் ஒன்று

யார் எடுத்தால் என்ன
உன் தாயின் மனம் மென்மை
யார் எடுத்தால் என்ன
உன் தாயின் மனம் மென்மை

யார் கொடுத்தால் என்ன
கண்ணே பாலின் நிறம் வெண்மை

சிப்பி தந்த முத்து
இது தெய்வம் தந்த சொத்து
உன்னை பெற்றெடுத்தாள் அன்னை
நான் தத்தெடுத்தேன் உன்னை

ஆரிராரி ராரோ ஆராராரிராரோ ராரோ
ஆரிராரி ராரோ ஆராராரிராரோ ராரோ
ஆரிராரி ராரோ ஆராராரிராரோ ராரோ

Pillai Kali Theera Lyrics in English :

Muthae maragadhamae

Mukkaniyae sakkaraiyae

Kothu marukkozhundhae

Kodai palaa pazhamae

Thathum kiliyae

Thadaagathu thaamaraiyae

Sandhana cholaiyae

Saamandhi poo kaadae

Vadakku pani malaiyae

Pani malaiyin kulir kaattrae

Kulir kaattril salasalakkum
Odai ilam thanneerae

Kulam kaakka vandha engal
Komaganae thaalaelo thaalae thaalaelo

Pillai kali theera
En pillai kali theera
Un annai vandhu serndhaal
Un annai kurai theera
Nee pinnae vandhu serndhaai

Pillai kali theera
Un annai vandhu serndhaal
Un annai kurai theera
Nee pinnae vandhu serndhaai
Aariraari raaro aaraariraari raaro

Nenjukku thaan theriyum
Adhu ninaithirundha neram

Kannukku thaan theriyum
Adhu kaathirundha kaalam

Nenjukku thaan theriyum
Adhu ninaithirundha neram
Kannukku thaan theriyum
Adhu kaathirundha kaalam

Pennukku thaan theriyum
Unnai sumandhirundha kolam
Pennukku thaan theriyum
Unnai sumandhirundha kolam

Pillaikku thaan theriyum
Annai manadhil ulla paasam

Pillai kali theera
En pillai kali theera
Un annai vandhu serndhaal
Un annai kurai theera
Nee pinnae vandhu serndhaai

Aariraari raaro aaraariraari raaro

Vaazhndha naalum ondru
Nee valarndha naalum ondru

Sumandha naalum ondru
Paal surandha naalum ondru

Vaazhndha naalum ondru
Nee valarndha naalum ondru

Sumandha naalum ondru
Paal surandha naalum ondru

Yaar eduthaal enna
Un thaayin manam menmai
Yaar eduthaal enna
Un thaayin manam menmai

Yaar koduthaal enna
Kannae paalin niram venmai

Sippi thandha muthu
Idhu dheivam thandha sothu
Unnai petreduthaal annai
Naan thatheduthaen unnai

Aariraari raaro aaraariraari raaro
Aariraari raaro aaraariraari raaro
Aariraari raaro aaraariraari raaro

See More Songs of Kulama Gunama 1971

Other Songs from - Kulama Gunama
1
Maathuru Ramakka

P. Susheela and  S. Janaki

2
Sorgathil Mayangum

P. Susheela and T. M. Soundararajan

3
Ulagil Irandu Kiligal

S. P. Balasubrahmanyam and S. Janaki